ஆர்யா நடிக்கும் வருத்தப்படாத வாலிபர் சங்கம்

சமீபத்திய தமிழ் சினிமாவில் ரசிகர்களை கவரும் விதமாக வித்தியாசமான தலைப்புள்ள படங்கள் அதிகளவில் வருகின்றன.

அந்தவகையில், ஆர்யா நடிக்க இருக்கும் டில்லி-பெல்லி தமிழ் ரீ-மேக் படத்திற்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்று பெயர் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்தியில் அமீர்கான் தயாரிப்பில், இம்ரான் கான் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் டில்லி பெல்லி. இப்படம் தமிழில் ரீ-மேக் செய்யப்பட இருக்கிறது.

படத்தின் நாயகனாக ஆர்யாவும், நாயகியாக ஹன்சிகாவும் நடிக்கின்றனர். இன்னொரு முக்கிய ரோலில் அஞ்சலி பத்திரிக்கையாளராக நடிக்க உள்ளார்.

ஜெயம் கொண்டான், வந்தான் வென்றான் படங்களின் டைரக்டர் கண்ணன் இப்படத்தை இயக்குகிறார்.

விரைவில் இப்படத்தின் சூட்டிங் ஆரம்பிக்கப்பட இருக்கையில், படத்திற்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்று பெயர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த டைட்டில் வின்னர் படத்தில் வடி‌வேலு நடித்தபோது அவர் வைத்திருந்த சங்கத்தின் பெயர் இதுவாகும்.

அதேசமயம் சேட்டை, வை ராஜா வை போன்ற தலைப்பு வைக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

ஹீரோவாக களம் இறங்குகிறார் லொள்ளு சபா ஜீவா

லொள்ளு சபா மூலம் பிரபலமான நடிகர் ஜீவா, அடுத்து ஹீரோவாக களம் இறங்க இருக்கிறார். விஜய் டி.வியின் லொள்ளு சபா மூலம் பிரபலமானவர்கள் நடிகர்கள் சந்தானம் மற்றும் ஜீவா.

இவர்களில் சந்தானம் இப்போது தமிழ் சினிமாவில் நம்பர்-1 காமெடியனாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

ஜீவா இப்போது தான் வளர்ந்து வருகிறார். இவர் குருவி, நினைத்தாலே இனிக்கும், போன்ற படங்களிலும், இதுதவிர நிறைய படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அடுத்து ஹீரோவாக களம் இறங்க இருக்கிறார். கடந்த ஆண்டு, டூ படத்தை இயக்கிய ஸ்ரீராம் பத்மநாபன் அடுத்து "மாப்பிள்ளை விநாயகர்" என்ற படத்தை இயக்க இருக்கிறார்.

இப்படத்தில் தான் ஜீவா, ஹீரோவாக நடிக்கள்ளார். ஜீவாவுடன் பாக்யராஜ், ஊர்வசி, வாட்சன் ஆகியோருடன் சந்தானமும் முக்கிய ரோலில் நடிக்க இருக்கிறார்.

டூ படத்திற்கு இசையமைத்த அபிஷேக்-லாரன்ஸ் ஆகிய இருவருமே இப்படத்திற்கும் இசையமைக்க இருக்கின்றனர்.

மாப்பிள்ளை விநாயகர் படம் முழுக்க காமெடி படமாக உருவாக இருக்கிறது. தற்போது கதாநாயகிக்கான தேடுதல் நடந்து வருகிறது.

மே மாத இறுதியில் இப்படத்தின் சூட்டிங் ஆரம்பமாக இருக்கிறது.

மே தினத்தில் கமலின் விஸ்வரூபம் டிரைலர்

கமல்ஹாசன் நடித்து வரும் விஸ்வரூபம் படத்தின் டிரைலர் மே 1ம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் கமல்ஹாசன் பிரம்மாண்ட பொருட்ச்செலவில் இயக்கி, நடித்து, தயாரித்து வரும் படம் விஸ்வரூபம்.

இப்படத்தில் கமல் ஜோடியாக பூஜா குமார் நடிக்கிறார். இவர் தவிர ஆன்ட்ரியாவும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். பொதுவாக பெரிய நடிகர்களின் படம் என்றால் அப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும்.

அதேசமயம் அப்படம் குறித்து சிறிய தகவல்களாவது வெளியாகும். ஆனால் விஸ்வரூபம் படத்தை பொறுத்தமட்டில் இப்படம் குறித்த சிறு விஷயம் கூட இதுவரை தெரியவில்லை.

கமல் இப்படத்தில் என்ன ரோலில் நடிக்கிறார், படத்தின் கதை என்ன? என்று இதுவரை யாருக்கும் தெரியாது. அந்தளவுக்கு இப்படம் குறித்து ரகசியம் வெளியில் தெரியாத அளவுக்கு படம் பிடித்து வருகிறார் கமல்ஹாசன். இதனாலேயே இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உண்டாகி இருக்கிறது.

இந்நிலையில் விஸ்வரூபம் படத்தின் டிரைலர் மே-1ம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. மே 1 உழைப்பாளர் தினம் என்பதால், அன்றைய தினத்தில் இப்படத்தின் டிரைலரை வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று கமல் கருதுகிறார்.

30 விநாடிகள் ஓடும் வகையில் இந்த டிரைலரை தயார் செய்துள்ளனர். படத்தின் முக்கிய சீன்கள் இந்த டிரைலரில் சேர்க்கப்பட்டுள்ளதாம்.

விஸ்வரூபம் படத்தின் பெரும்பாலான சூட்டிங் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. ஜூன் மாத இறுதியில் இப்படம் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

அம்மா நடிகையையும் சிபாரிசு செய்யும் நம்மூர் ஹீரோக்கள்

ராட்டினம் இது புதுமுக இயக்குநர் கே.எஸ்.தங்கசாமி இயக்க, புதுமுகங்கள் நடிக்க வேந்தர்மூவீஸ் தயாரிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம்.

இப்படத்தில் ஆடியோ வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து நடந்த பிரஸ் மீட்டில் கே.எஸ்.தங்கசாமி, இந்தப்படத்தின் ஹீரோ லகுபரனை ஃபேஸ்புக்கில் தேர்வு செய்தேன்.

காமெடியனை பிளாக்கில் பிடித்தேன், கதாநாயகியை கேரளாவில் பிடித்தேன், படத்தை தூத்துக்குடியில் எடுத்தேன் ஆனால் கதாநாயகியின் அம்மாவாக நடிக்கும் எலிசபெத்தை மட்டும் ஹீரோ லகுபரனின் சிபாரிசில் நடிக்க வைத்தேன் என்றார்.

இதையே கேள்வியாக்கிய ஒரு நிருபர் ஹீரோ லகுபரனிடம்., ஹீரோயின்களையே சிபாரிசு செய்யும் ஹீரோக்கள் மத்தியில் அறிமுக ஹீரோ நீங்க அம்மா கேரக்டரை சிபாரிசு செய்ய அவசியம் என்ன? என்று இருபொருட்பட கேட்டார்...

இதில் பதறிப்போன லகுபரன்..அய்யய்யோ நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்றுமில்லை. நான் காதல் சொல்ல வந்தேன் படத்தில் அஸிஸ்டென்ட் டைரக்டர்! அப்பொழுது அந்த படத்தில் எலிசபெத் மேடம் நடித்தது நன்றாக இருந்தது.

இந்தப்படத்திற்கு அம்மா கேரக்டர் வேண்டும் என்றதும் நான் அவர்களை சிபாரிசு செய்தேன், அவ்வளவுதான். ஏதோ வளரும் நடிகர் பார்த்து சார் ..என பவ்யம் காட்டினார்!

தல கூட நடிச்சாச்சு தளபதியுடன் நடிக்கோணும்

தனது ஆஸ்தான இயக்குநர் ராகவேந்திரா லாரன்ஸை தனது சென்னை சாலிகிராமம் வீட்டிற்குள் விட மறுத்தது...ஐ.பி.எல்., 20-20 போட்டியில் சென்னை அணியை உற்சாகப்படுத்த தனி விமானத்தில் வந்தது..

உள்ளிட்ட் நடிகை லட்சுமிராய் பற்றிய கடந்த வாரம் வரையிலான விஷயங்கள் பற்றி மறந்துடுங்க ! அவர் பற்றிய லேட்டஸ்ட் இதோ..

மும்பையில் துப்பாக்கி படப்பிடிப்பில் இருக்கும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஓட்டல் அறைக்கதவை அர்த்தஜாமத்தில் தட்டி, தல அஜீத்துடன் மங்காத்தா படத்துல நடிச்சுட்டேன்..

தளபதி விஜய்யுடன் துப்பாக்கியில ஒத்தப்பாட்டுக்காவது குத்தாட்டம் போட்டாகணும் ப்ளீஸ் என்றவர்.ஏ.ஆர்., முருகதாஸ் ப்ளீஸ், ப்ளீஸ் சொல்லி கெஞ்சும் வரை விடாமல் விரட்டியதாக ( அன்பு விரட்டல் தான்..) தகவல் மும்பையில் இருந்து கசிகிறது! நினம் என்ன ..பொய்யென்ன..? என்பது லட்சுமிராய்க்கும் முருகதாஸூக்குமே வெளிச்சம்...! ஹீ..ஹீ...!

தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்

கொடுக்கிற தெய்வம் கூரையை பிச்சுகிட்டு கொடுக்கும் என்கிற பழமொழி சிவகார்த்திகேயன் வாழ்க்கையில் சரியாகி விட்டது. டி.வி., காம்பியரிங்கில் கலக்கிக் கொண்டிருந்த சினகார்த்திகேயன் மெரினா படத்தில் நடித்து, தமிழ் திரையுலகில் தன்னை ஒரு நடிகராக எஸ்டாபிளிஷ் பண்ணிக்கொண்டார்.

இப்போது அவர் கோடம்பாக்கத்தில் டிமான்டில் இருக்கிறார். தனுஷின் 3 திரைப்படத்தில் சிறிது நேரம் மட்டுமே வரும் ஒரு ரோலில் நடித்தாலும், அவர் காமெடிக்கும் கெட்டப்பக்கும் வரவேற்பு அமோகமாக இருந்தது. எனவே சிவகார்த்திகேயனை ஹீரோவாக வைத்து தனுஷ் ஒரு படம் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் படத்தினை வெற்றிமாறன் அசிஸ்டென்ட் செந்தில் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. எது எப்படியோ சிவகார்த்திகேயன் காட்டில் மழை.. அதுவும் அடைமழை..

பிரச்சினையில் இருந்து மீண்டு விட்டேன்: நயன்தாரா

நயன்தாரா-பிரபுதேவா காதல் முறிந்து பிரிந்துள்ளனர். திருமணத்துக்கு பிரபுதேவா சம்மதிக்காததால் பிரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மதம் மாறியும் சினிமாவுக்கு முழுக்கு போட்டும் திருமணத்துக்காக காத்திருந்த தன்னை பிரபு தேவா ஏமாற்றி விட்டதாக நயன்தாரா கலங்குவதாக கூறப்படுகிறது.

தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். தெலுங்கு, தமிழ் படங்களில் நடிக்க அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர். சினிமாவில் இரண்டாவது ரவுண்டு துவங்கியுள்ள நயன்தாரா ஐதராபாத்தில் அளித்த பேட்டி வருமாறு:-

சமீபத்தில் நிறைய பிரச்சினைகளை சந்தித்தேன். கஷ்டங்களை அனுபவித்தேன். அவை என்னை பக்குவப்படுத்தி என்ன வந்தாலும் எதிர் கொள்ளலாம் என்ற மனதிடத்தையும் அளித்துள்ளது. இனி எதற்கும் கலங்க மாட்டேன். பிரச்சினைகள் எப்படி வந்தாலும் சந்திப்பேன்.

பெரியவர்கள் என்ன நடந்தாலும் நம் நல்லதுக்குத்தான் என்று சொல்வதை கேள்விப்பட்டு இருக்கோம். அது என் வாழ்க்கையில் நிஜமாகியுள்ளது. நடந்த சம்பவங்களை நல்லதுக்குத்தான் என்று எடுத்துக் கொண்டேன். மீண்டும் சினிமாவில் நடிக்க வந்து விட்டேன். வாழ்க்கை இப்போ நல்லா போயிட்டு இருக்கு தமிழ், தெலுங்கு படங்களில் வாய்ப்புகள் வருகின்றன.

சிறு வயதில் கஷ்டம் கண்ணீர் தெரியாமல் ரொம்ப செல்லமா வளர்ந்தேன். அப்புறம் பிரச்சினைகளில் மாட்டி அவதிப்பட்டேன். அது ரொம்ப தப்பு என இப்ப புரியது. துன்பங்களை மறக்க பழகி விட்டேன்.

பிரச்சினைகளை எதிர்த்து போராடும் திறமை இல்லாவிட்டாலும் அவற்றில் இருந்து தப்பிக்க வழி தெரிந்து இருக்க வேண்டும்.

திரிஷாவுடன் எனக்கு மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக கிசுகிசுக்கள் வருகின்றன. பத்திரிகைகளில் வெளியாகும் இது போன்ற செய்திகளுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

ஹீரோயின் படத்தில் அந்தக்கால கவர்ச்சி நடிகை

பழம்பெரும் கவர்ச்சி நடிகை ஹெலன், மதுர் பந்தர்கரின் ஹீரோயின் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார். முதலில் ஐஸ்வர்யா ராய் நடிக்க இருந்த ஹீரோயின் திரைப்படம் அவர் கர்ப்பம் அடைந்த காரணத்தால் கரீனாவின் கைகளுக்குச் சென்றது.

கரீனா கபூர் ஹீரோயினாக நடிக்கும் ஹீரோயின் திரைப்படம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருக்கிறது.

இந்நிலையில், இத்திரைப்படத்தில் ஒரு காலத்தில் கவர்ச்சி கன்னியாக கலக்கிய ஹெலன் முக்கிய ரோலில் நடிக்க இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இது குறித்து படத்தின் இயக்குநர் மதுர் பந்தர்கர் கூறுகையில் : ஆம் ஹீரோயின் படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார். என் படங்களை அவர் விரும்பிப் பார்த்திருப்பதாக கூறியபோது நெகிழ்ந்து போனேன்.

ஹீரோயின் படத்தில் ஹெலனுக்கு 5 சீன்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவை மிகவும் முக்கியமானவை, அழுத்தமானவை. அந்த கதாபாத்திரத்தை ஹெலன் சிறப்பாக ஏற்று நடிப்பார் என நான் முழுமையாக நம்புகிறேன் என்றார்.

அஜித் பிறந்தநாளில் பில்லா-2 ஆடியோ

அஜித் பிறந்தநாளில் அவரது பில்லா-2 படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித்தின் பில்லா பார்ட் 1 படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக உருவாகி இருக்கும் படம் பில்லா-2.

இப்படத்தில் அஜித் எப்படி பில்லாவாக மாறினார் என்பது படத்தின் கதை. படத்தில் அஜித் ஜோடியாக பார்வதி ஓமணக்குட்டனும், இன்னொரு முக்கிய ரோலில் புரூனா அப்துல்லாவும் நடித்துள்ளனர். இப்படத்தின் சூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ்‌க்கு தயாராகி வருகிறது.

ஆரம்பத்தில் இப்படத்தினை அஜித் பிறந்தநாளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர். ஆனால் படப்பிடிப்பு முடிய காலதாமதம் ஆகிவிட்டதால் அது முடியாமல் போய்விட்டது.

இந்நிலையில் படத்தின் ஆடியோவையாவது அவரது பிறந்தநாளான மே 1ம் தேதி வெளியிட திட்டமிட்டு வருகின்றனர் படக்குழுவினர். அதற்கான வேலைகளும் மும்முரமாக நடந்து வருகிறது.

சமீபத்தில் வெளியான பில்லா-2 படத்தின் டிரைலர் தொகுப்பும் நல்ல வரவேற்பை பெற்றது. படத்திற்கான எதிர்பார்ப்பும் கூடியிருக்கிறது.

இதனால், முழு டிரைலரையும் இன்னும் கூடுதலாக மெருகேற்றி வருகின்றனர்.

மேலும் ஆடியோ விழாவிலேயே இந்த டிரைலரையும் வெளியிட திட்டமிட்டு வருகின்றனர்.

சந்தானம், உதயநிதி ஸ்டாலின் மீது மோசடி புகார்

நடிகர் சந்தானம் மற்றும் உதயநிதிஸ்டாலின் ஆகியோர் தன்னிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்துவிட்டதாகவும், பணத்தை கேட்டால் அடியாட்களை வைத்து மிரட்டுவதாக சென்னையை சேர்ந்த ஐஸ் கம்பெனி அதிபர் ரவி கிஷன் என்பவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்திருக்கிறார்.

சென்னை உத்தண்டியை சேர்ந்தவர் ரவி கிஷன். இவர் ‌சொந்தமாக ஏஞ்சல் என்ற பெயரில் ஐஸ் கம்பெனி நடத்தி வருகிறார். ரவிகிஷனுக்கு விருகம்பாக்கம் அருகே 2 கிரண்வுட் இடத்தில் பங்களா ஒன்று உள்ளது. இதனை வாங்க நடிகர் சந்தானம் முயற்சி செய்துள்ளார்.

பங்களாவின் மதிப்பு ரூ.2.25 கோடி. ஆனால் சந்தானம், உதயநிதி ஸ்டாலின் உதவியோடு ரூ1.85 கோடிக்கு விலை பேசி, கடந்த 2010-ம் ஆண்டு பத்திரபதிவும் நடந்தது. பத்திரபதிவின் போது சந்தானம் ரூ.1.75 கோடி தான் ரவி கிஷனிடம் கொடுத்துள்ளார்.

மீதி ரூ.10 லட்சத்தை பின்னர் தருவதாக கூறியுள்ளார். ஆனால் இன்று வரை பணத்தை சந்தானம் தரவில்லை. இடையில் காசோலையும் கொடுத்துள்ளார். ஆனால் அந்த காசோலை பணம் இல்லாமல் திரும்பி வந்துவிட்டது.

இதனையடுத்து சந்தானத்திடம் பணம் கேட்டுள்ளார் ரவி கிஷன். ஆனால் அவர் பணம் தர மறுக்கிறார். மேலும் பணத்தை கேட்டால் உதயநிதி துணையோடு அடியாட்களை வைத்து மிரட்டவும் செய்துள்ளார்.

இதனையடுத்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், சந்தானம் மற்றும் அவருக்கு துணையாக இருந்த தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் மீது புகார் கொடுத்திருக்கிறார் ரவி கிஷன்.

அதில் பணத்தையும் தராமல், அடியாட்கள் வைத்து தன்னையும், தனது குடும்பத்தையும் மிரட்டுவதாகவும், தனது புகார் மனுவில் கூறியிருக்கிறார்.

ஜெயம் ரவியுடன் ரொமான்ஸ்க்கு தயாராகும் நயன்தாரா

ஆதிபகவன் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி அடுத்து நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பார் எனத் தெரிகிறது. நீண்ட காலமாக ஜெயம் ரவி நடித்து வரும் படம் ஆதி பகவன். இப்படத்தை அமீர் இயக்குகிறார்.

கிட்டத்தட்ட இரண்டு வருடமாக நடந்து வரும் இப்படத்தின் சூட்டிங் இன்னும் முடிந்தபாடில்லை. இந்நிலையில் இப்படத்திற்கு அடுத்து பூலோகம் என்ற படத்தில் நடிக்கிறார் ரவி.

எஸ்.பி.ஜெகநாதனிடம் உதவியாளராக இருந்த கல்யாண் இப்படத்தை தயாரிக்கிறார். ஆஸ்கர் ரவிச்சந்திரன் இப்படத்தை தயாரிக்கிறார்.

பூலோகத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

சமீபத்தில் கல்யாணும், அவர் குழுவை சேர்ந்தவர்களும் நயன்தாராவை சந்தித்து பூலோகம் படத்‌தின் கதையை விளக்கி உள்ளனர்.

நயன்தாராவுக்கும் பூலோகம் படத்தின் கதை பிடித்து போய்விட்டதாக தெரிகிறது. இருந்தும் நடிப்பதாக நயன்தாரா உறுதியாக சொல்லவில்லை.

அதேசமயம் சினிமாவில் ரீ-என்ட்ரியாகி இருப்பதால் தமிழ் சினிமாவில் தன்னை நிலைத்து கொள்ள இப்படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

மேலும் ஜெயம் ரவியுடன் சேர்ந்து நயன்தாரா இதுவரை எந்த படமும் நடித்ததில்லை. அதனால் நிச்சயம் இப்படத்தில் நடிப்பார் என்று நம்பப்படுகிறது.

அடுத்த மாதம் இப்படத்தின் சூட்டிங்கை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளனர்.

விக்ரம் - ஜீவா இணைந்து நடிக்கும் டேவிட்

பாலிவுட் சினிமாவை போல கோலிவுட்டிலும் இரண்டு ஹீரோக்கள் சேர்ந்து நடிக்கும் டிரண்ட் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் வெளியான அவன் இவன், விரைவில் வெளிவர இருக்கும் முகமூடி, கலகலப்பு(மசாலா கபே) போன்ற படங்களை சொல்லலாம்.

பாலிவுட்டிற்கு முன்னரே தமிழ் சினிமாவில் இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் நடைமுறை இருந்து வந்தது. அதன்பிறகு ஹீரோக்களுக்கு தனியாக முக்கியத்துவம் கருதி இந்தநிலை நீடிக்கவில்லை.

ஆனால் பாலிவுட்டில் மட்டும் எப்போதும் போல ஷாரூக், சல்மான், அமீர் போன்றவர்கள் இந்த பாணியை பின்பற்றி வருவதால் தமிழ் சினிமாவில் மீண்டும் இரண்டு ஹீரோக்கள் சப்ஜெக்ட் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் டைரக்டர் பிஜய் நம்பியார், அடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று ‌மொழிகளில் ஆக்ஷ்ன் மற்றும் த்ரில்லர் கலந்த ஒரு படத்தை இயக்க உள்ளார்.

தமிழ் மொழியில் உருவாகும் படத்திற்கு டேவிட் என்று பெயர் வைத்துள்ளார். இதில் ஹீரோக்களாக விக்ரம் மற்றும் ஜீவா ஆகியோர் நடிக்க உள்ளனர்.

இதுதவிர இந்தி மற்றும் தெலுங்கில் முக்கிய இரு ஹீரோக்கள் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

தற்போது ஜீவா மிஸ்கினின் முகமூடி மற்றும் கவுதமின் நீதானே என் பொன் வசந்தம் படத்திலும், விக்ரம் - விஜய்யின் தாண்டவம் படத்திலும் நடித்து வருகிறார்.

இவர்கள் இருவரும் தங்களது படங்களை முடித்த பின்னர் டேவிட் படத்தில் இணைவார்கள் என்று தெரிகிறது.

பில்லா-2 வில் யுவனின் அசத்தல் நடனம்

பில்லா-2 படத்தை பற்றி தினம் ஒரு தகவல் வந்து கொண்டிருக்கிறது. இன்றைய தகவல் என்னவென்றால் படத்தில் இசையமைத்து இருப்பதுடன் அசத்தலாக ஒரு பாட்டுக்கு நடனமும் ஆடியிருக்கிறாராம் யுவன் சங்கர் ராஜா.

மங்காத்தா படத்தை தொடர்ந்து அஜித் நடித்து இருக்கும் படம் பில்லா-2. பில்லா படம் ‌மாபெரும் ஹிட்டானதை தொடர்ந்து அதன் 2ம் பாகமாக இப்படம் உருவாகி வருகிறது.

டேவிட், எப்படி பில்லாவாக மாறினான் என்பதே பில்லா-2 படத்தின் கதைக்களம். இப்படத்தின் சூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கான பணிகள் நடந்து வருகிறது.

இதனிடையே பில்லா-2 படத்தின் ஸ்டில்கள் மற்றும் டிரைலர்கள் இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது. மேலும் வர்த்தக ரீதியாகவும் இப்படத்திற்கு நல்ல விலை பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பில்லா-வை போலவே பில்லா-2விலும் மிரட்டலாக இசை அமைத்திருக்கும் யுவன் சங்கர் ராஜா, படத்தில் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடவும் செய்திருக்கிறார்.

இதுகுறித்து படத்தின் டைரக்டர் சக்ரி கூறுகையில், யுவனை இப்படத்தில் ஒரு பாட்டுக்கு ஆட வைக்க திட்டமிட்டேன். பலமுறை அவரிடம் கேட்டபிறகு நடனம் ஆட சம்மதித்தார்.

அந்த பாடலும் நன்றாக வந்திருக்கிறது. ரசிகர்களை இந்தப்பாடல் நிச்சயம் கவரும் என்று கூறியுள்ளார்.

கோடிகளில் புரளும் இந்திய நடிகைகள்

கோலிவுட் முதல் பாலிவுட் வரை இந்திய அளவில் நடிகைகளின் சம்பளம் கணிசமாக உயர்ந்துள்ளதால் நயன்தாரா, இலியானா, த்ரிஷா போன்ற நடிகைகளின் சம்பளம் கோடியை தொட்டு இருக்கிறது.

தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெயரை ப்ரியங்கா சோப்ரா தட்டி சென்றுள்ளார்.

இவர் வாங்கும் சம்பளம் ரூ.9 கோடி. இதற்கு அடுத்தபடியாக ஐஸ்வர்யா ராய் ரூ.6 கோடி சம்பளம் பெறுகிறார். இவர் இந்த தொகையை எந்திரன் படத்திற்காக பெற்றார்.

அடுத்து கத்ரீனா கைப் ரூ.3 கோடியும், தீபிகா படுகோனே ரூ.2.5 கோடியும், வித்யாபாலன் ரூ.1.5 கோடியும் பெறுகின்றனர்.

தென்னிந்திய நடிகைகளை பொறுத்தவரை பாலிவுட் நடிகைகளுடன் ஒப்பிடுகையில் ரொம்ப குறைவு தான். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகைகளாக இருக்கும் அனுஷ்கா, த்ரிஷா ஆகியோரைக் காட்டிலும் பிரபுதேவாவுடனான காதலை முறித்து கொண்ட பின்னர் சினிமாவில் ரீ-என்ட்ரியாகி இருக்கும் நயன்தாரா அதிக சம்பளம் பெறுகிறார்.

அவர் அதிகபட்சமாக ரூ.1.5 கோடி சம்பளம் பெறுகிறார். அதேபோல் நண்பன் படத்திற்கு கிடைத்த வரவேற்பால் இலியானாவும் ரூ1.5 கோடி சம்பளம் பெறுகிறார்.

இவருக்கு அடுத்தபடியாக த்ரிஷா தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதையடுத்து அவரது சம்பளம் ரூ1.20 கோடியாக உயர்ந்து இருக்கிறது. இவர்கள் தவிர அனுஷ்கா, காஜல் போன்றோரும் கோடி ரூபாய் சம்பளம் பெறுகின்றனர்.

கன்னட நடிகை திவ்யா ஸ்பந்தனா ரூ.40 லட்சமும், ப்ரியாமணி ரூ.30 லட்சமும், காவ்யா மாதவன் ரூ.17 லட்சமும், மம்தா மோகன்தாஸ் ரூ.15 லட்சமும் சம்பளமாக பெறுகின்றனர்.

அஜித்தின் பில்லா 2 புது சாதனை

அஜித்தின் பில்லா-2 படம் ரிலீஸ் ஆதவற்கு முன்பே புதிய சாதனை படைத்திருக்கிறது.

பில்லா பார்ட் 1 படம் ரசிகர்களை கவர்ந்ததைப் போலவே இந்த படமும் ரசிகர்களை வெகுவாக கவரும் என்ற எதிர்பார்ப்பு ஒருபுறமிருக்க, படத்தின் தொலைக்காட்சி உரிமை, வெளியீட்டு உரிமை, வெளிநாட்டு உரிமை என ஒவ்வொன்றுமே பெரும் விலைக்கு பேசப்பட்டுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின.

படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே வர்த்தக ரீதியாக பெரும் சாதனை படைத்திருக்கும் பில்லா 2, சத்தமில்லாமல் இன்னொரு சாதனையையும் படைத்திருக்கிறது.

சில தினங்களுக்கு முன்னர் தான் பில்லா-2 படத்தின் இரு ட்ரையிலர்கள் யு-ட்யூபில் வெளியிடப்பட்டது.

இந்த டிரைலர்களுக்கு ஏக வரவேற்பு. வெளியான ஒரு நாளைக்குள் பல லட்சம் பேரால் பார்க்கப்பட்ட இந்த ட்ரைலர்களைப் பாராட்டி கமெண்ட்கள் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கோச்சடையானுக்கு 4 பாலிவுட் மாஸ்டர்கள்

‘கோச்சடையான்’ படத்துக்கு 4 பாலிவுட் நடன இயக்குனர்கள் நடனம் அமைக்கிறார்கள் என்றார் இயக்குனர் சவுந்தர்யா. ரஜினிகாந்த் நடிக்கும் ‘கோச்சடையான்’ ஷூட்டிங் சமீபத்தில் லண்டனில் தொடங்கியது.

இதில் சரத்குமார், ஆதி, தீபிகா படுகோன், ஷோபனா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார்.

மோஷன் கேப்சர் முறையில் இதன் ஷூட்டிங்கை சவுந்தர்யா படமாக்கி வருகிறார். இப்படத்தின் ஸ்டார் அந்தஸ்து நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது.

பிரபல நடிகர்கள் பலர் நடிப்பதுபோல் பிரபல டான்ஸ் மாஸ்டர்களும் இதில் பணியாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

சரோஜ் கான், ராஜு சுந்தரம், சின்னி பிரகாஷ், ஷோபி ஆகியோர் நடனம் அமைக்கின்றனர்.

இதுபற்றி சவுந்தர்யா கூறும்போது, ‘சரோஜ் கான், சின்னி பிரகாஷ், ராஜு சுந்தரம், ஷோபி ஆகிய பிரபலமான 4 நடன மாஸ்டர்களுடன் பணியாற்றுவது வியப்பும் மகிழ்ச்சியும் அளிக்கிறது. அதற்காக கடவுளுக்கு நன்றி’ என்றார்.

சினிமாவில் தான் அஜித்துக்கும் எனக்கும் போட்டி - விஜய்

சினிமாவில் தான் அஜித்தும், நானும் நீயா-நானா...? என்று போட்டி போடுவோம் மற்றபடி நாங்கள், நல்ல நண்பர்கள் என்று கூறியுள்ளார் நடிகர் விஜய்.

பல்வேறு தடைகளை கடந்து இன்று, தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வளர்ந்து இருக்கும் நடிகர் விஜய், ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, பொதுவாக எல்லா ஹீரோக்களும் ரொமான்ட்டிக்கில் இருந்து அதிரடிக்கு மாறுவார்கள்.

ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் அப்படியே மாறியிருக்கிறது. எனது சினிமா கேரியரில் இடைப்பட்ட காலத்தில் தான் ரொமான்ட்டிக் ரோலில் நடித்து, இப்போது ஆக்ஷ்ன் ஹீரோவாக மாறியிருக்கிறேன்.

எனக்கு காமெடி கலந்த ரொமான்ஸ் காட்சியில் தான் நடிக்க ஆசை, ஆனால் இன்றைய ரசிகர்களின் எதிர்பார்ப்பை உணர்ந்து கமர்ஷியலில் நடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது என்றார்.

மேலும் சினிமாவில் தனக்கு யார் போட்டி என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த விஜய், ரஜினி-கமல் ஆகியோரைத் தொடர்ந்து எனக்கும், அஜித்துக்கும் போட்டி என்று பலரும் கூறுகிறார்கள்.

சினிமாவை பொறுத்த வரைக்கும் அஜித்துக்கும், எனக்கும் நீயா - நானா...? என்று போட்டி நடக்கும், மற்றபடி நானும் அஜித்தும் நல்ல நண்பர்கள். நாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து கொள்வோம்.

நான் அவருடைய வீட்டிற்கும், அவர் என்னுடைய வீட்டிற்கும் வருவது உண்டு. எங்களைப் போலவே எங்கள் இருவரது குழந்தைகளும் நல்ல நண்பர்களாய் இருக்கிறார்கள். சினிமாவில் ஆரோக்கியமான போட்டி இருப்பது நல்லது தானே.

தற்போது முருகதாஸின் துப்பாக்கியில் நடித்து வருகிறேன். அருமையான ஆக்ஷ்ன் கலந்த த்ரில்லர் கதை. முருகதாஸ் ரொம்ப திறமையானவர், அவர் ஒரு குட்டி மணிரத்னம். அதேபோல் படத்தின் நாயகி காஜல் அகர்வாலும் நல்ல பொருத்தம். வில்லனாக வித்யூத் ஜமால் நடித்துள்ளார்.

அவரை வில்லன் என்று சொல்லுவதை விட, ஹீரோ என்றே சொல்லலாம். துப்பாக்கி படத்திற்கு அடுத்தப்படியாக கவுதம் மேனனின், யோஹன் அத்தியாயம் ஒன்று படத்திலும், அதற்கு அடுத்து விஜய் டைரக்ஷ்னில் ஒரு படத்திலும் நடிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

தமிழ் குத்தப்பாடலில் அமெரிக்க பாப் பாடகி

பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் அசிஸ்டென்டாக இருந்த பிரபுராஜ சோழன் இயக்கத்தில், அஜ்மல், அபர்ணா பாஜ்பாய் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் கருப்பம்பட்டி.

இப்படத்தில், நாட்டி ராஜா ராஜா.. என்ற ஒரு குத்துப் பாடல் இடம் பெறுகிறது. இப்பாடலுக்காக பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் பப்பிலஹரிக்கு பெரிய தொகையைக் கொடுத்து, மும்பை ஸ்டுடியோவில் வைத்து பதிவு செய்துள்ளனர்.

பாட்டும் நன்றாக வந்திருப்பதாக டைரக்டர் பிரபுராஜா சோழன் கூறியிருக்கிறார். முதன்முறையாக தமிழ் படம் ஒன்றுக்கு பப்பி லஹரி பாடியிருக்கிறார்.

இது போதாது என்று பாடலில் ஆட்டம் போட, அமெரிக்க பாப் பாடகி கேட்டி பெர்ரியை அனுகியிருக்கிறாராம் இயக்குநர் பிரபு ராஜ சோழன்.

சென்னையில் நடந்த ஐ.பி.எல்., சீசன் 5 துவக்க விழாவில் ஆட்டம் போட்ட கேட்டி பெர்ரி மீது கோலிவுட் கண்கள் குறி வைத்திருக்கின்றனாம்!

முதலில் களம் இறங்கியிருப்பவர் பிரபு ராஜ சோழன். எப்படியாவது கேட்டியை குத்தாட்டம் போட வைக்க கடும் பிரயத்தனம் செய்து வருகிறாராம் மனிதர்.பிரமாண்ட இயக்குநரிடம் பணியாற்றியதால் வந்த தாக்கம் தானோ?!

தனுஷ் வராததால் ஏமாற்றம் அடைந்த ராக்கி சாவந்த்

தன்னுடன் இணைந்து மேடை நிகழ்ச்சியொன்றில் கொலைவெறி பாடலுக்கு நடனம் ஆடுவதாகக் கூறிய தனுஷ், வராததால் ஏமாற்றமடைந்ததாக பிரபல கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் குற்றம் சாட்டியுள்ளார்.


தான் பட்ட கஷ்டமெல்லாம் வீணாய்ப் போய்விட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். பாலிவுட்டி பரபரப்பு கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த்.


இவர் மும்பை நிகழ்ச்சியொன்றில் தனுஷுடன் மேடையில் தோன்றி ‘ஒய் திஸ் கொல வெறி டி என்ற 3 பட பாட்டிற்கு நடனம் ஆட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.


இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டதாம். இந்த விழாவில் முதலில் நடனம் ஆட ஒப்புக்கொண்ட தனுஷ் விழாவுக்கும் செல்லவில்லை. இதனால் ராக்கி சாவந்த் கோபம் அடைந்தார்.


தனுஷுடன் இணைந்து ஆடவேண்டும் என்று கூறியதால்தான் நான் ஒப்புக்கொண்டேன். இதற்காக பலமுறை ஒத்திகையில் ஈடுபட்டேன். இவ்வளவு கஷ்டப்பட்டது வீணாகிவிட்டது.


வருவதாக உறுதி கூறியவர், வராமல் ஏமாற்றி விட்டார். இது தொழில்முறை கலைஞருக்குரியதல்ல, என்றார் கோபமாக.


இதுபற்றி தனுஷ், 3 படம் ரிலீசுக்காக நான் சென்னையில் இருக்க வேண்டி இருந்தது. எனவேதான் ராக்கி சாவந்த் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை, என்றார் கூறியுள்ளார்.

3 ஹிட்டா, ப்ளாப்பா? பதில் சொல்ல மறுத்த தனுஷ்

சமீபத்தில் ரிலீஸ் ஆன கொலவெறி பாடல் புகழ் 3 படம் ஹிட் ஆனதா, ப்ளாப் ஆனதா என்ற கேள்விக்கு நடிகர் தனுஷ் பதில் அளிக்க மறுத்து விட்டார்.

இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், 3 படம் ஹிட்டானதா? இல்லையா? என்று எனக்கு தெரியாது. எனவே அதுபற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை, என்று கூறியிருக்கிறார்.

மேலும் இப்படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கு போதுமான பணம் கிடைத்துள்ளது என்பதை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும், என்றும் தனுஷ் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், கொலவெறி பாடல் இந்த அளவுக்கு பிரபலமாகி எனக்கு பெரிய அந்தஸ்தை பெற்றுத் தரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இந்த பாடல் ஹிட் மூலம் முடியாதது எதுவுமில்லை. எல்லாமே முடியக்கூடியது என்று கற்றுக் கொண்டேன்.

நடனம் ஆடவும், பாடவும் எனக்கு பிடிக்கிறது. கொலை வெறி பாட்டில் ஆங்கில வார்த்தைகள் கலந்ததற்காக விமர்சனங்கள் கிளம்பின. நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்னால் எனது உலகத்தில் நான்தான் ராஜாவாக இருந்தேன்.

நடிகரானதும் எனக்கு ஆங்கிலம் தெரியாததால் தாழ்வு மனப்பான்மைக்கு ஆளானேன். என்னுடன் நடித்த நடிகர் - நடிகைகள் எல்லோரும் வேறு மாநிலங்களில் இருந்து வந்தனர். அவர்களிடம் அவரவர் மொழியில் என்னால் பேச முடியவில்லை.

நட்சத்திர ஓட்டல்களில் கூட ஆர்டர் செய்ய முடியாமல் சிரமப்பட்டேன். ஆங்கில அறிவு இன்மையால் எனது நம்பிக்கை முழுமையாக சிதைந்து போனது.

எனது உணர்வுகள் நிறைய பேரிடம் இருப்பதை தெரிந்து கொண்டேன். அதை கொலைவெறி பாட்டில் பிரதிபலித்தேன். அப்பாடல் விமர்சிக்கப்பட்டது, என்று கூறியுள்ளார்.

சினிமா வரலாற்றில் முதன்முறையாக விளம்பர படத்தில் கமல்

ஒரு படத்தில் நடித்து, அந்தபடம் சூப்பர் ஹிட்டாகிவிட்டாலே அடுத்த படம் நடிப்பதற்குள் கைநிறைய விளம்பர படங்களை குவித்து விடும் இந்தக்கால நடிகர்-நடிகையருக்கு மத்தியில், சினிமாவுக்கு வந்து 50 ஆண்டு காலமாகியும் இதுவரை விளம்பர படங்களில் நடிக்காமல் இருந்து வந்த கமல்ஹாசன், இப்போது முதன்முறையாக விளம்பர படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்தியில் அமிதாப், ஷாரூக்கான், அபிஷேக், ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர் போன்ற பாலிவுட் ஸ்டார்களை வைத்து விளம்பர படங்களை எடுத்த பிரபல மும்பை நிறுவனம் ஒன்று கமல்ஹாசனை வைத்து விளம்பரம் எடுக்க ஒப்பந்தம் செய்திருக்கிறது.

இதுகுறித்து கமல்ஹாசன் கூறியுள்ளதாவது,

இந்தியாவின் பல ஸ்டார்களை வைத்து விளம்பரம் எடுத்த சுனில் தோஷியின் அலைன்ஸ் விளம்பர நிறுவனத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளேன்.

சினிமா வாழ்க்கையில் முதல் தடவையாக இந்த முயற்சியில் இறங்குகிறேன்.

இதன்மூலம் என்னால் முடிந்த அளவுக்கு சமூக சேவையில் ஈடுபட முயற்சிப்பேன் என்று கூறியுள்ளார்.

அண்ணன் தம்பிக்குள் ஆப்பு வைக்கும் சினிமா

எனக்கு 20 உனக்கு 18, கேடி படங்களின் இயக்குநர் ஜோதிகிருஷ்ணா தனது இயக்கத்தில் ஊலலலா படத்தின் மூலம் கதாநாயகராகவும் தெளிய இருப்பதால் அண்ணன் மீது ஏக கடுப்பில் இருக்கறார் அவரது தம்பியும் நடிகருமான ரவிகிருஷ்ணா!

அண்ணனுக்குப் போட்டியாக தானும் இயக்குநர் கம் நாயகராக களம் இறங்கும் முடிவில் இருக்கும் ரவி, அப்பா ஏ.எம்.ரத்னத்திடம் சொல்லி அவரது ஸ்ரீசூர்யா மூவீஸ் தயாரிப்பில் தனது இயக்கம் மற்றும் நடிப்பில் ஒரு படம் பண்ண சொல்லி பாடாய் படுத்தி வருகிறாராம்!

இவரது கடுப்பை கண்டு அண்ணன் ஜோதிகிருஷ்ணா, பர்ஸ்ட் கார்பி ரெடியாக வீட்ட ஊலலலா படத்தை ஊருக்கெல்லாம் போட்டு காட்டி வருகிறார். ஆனால் தம்பிக்கு மட்டும் இன்னும் திரையிட்டு காண்பிக்கவில்லை என்றால் பாருங்களேன்

பஞ்சபாண்டவர்களின் மனைவியாக நயன்தாரா

சீதையாய் நடித்து அசத்திய நடிகை நயன்தாரா, அடுத்து பஞ்சபாண்டவர்களின் மனைவியாய், திரவுபதி எனும் பாஞ்சாலி கேரக்டரில் நடிக்க இருக்கிறாராம். பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு முன்னர் தெலுங்கில் கடைசியாய் நடித்த படம் "ஸ்ரீ ராம ராஜ்யம்".

ராமாயணத்தை மையமாக வைத்து உருவான இக்கதையில், ராமராக பாலகிருஷ்ணாவும், சீதையாக நயன்தாராவும் நடித்தனர்.

சமீபத்தில் வெளியான இப்படம் நயன்தாராவுக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அதுமட்டும் அல்லாது அந்த கேரக்டருக்காக அவருக்கு விருதும் கிடைத்தது. மேலும் இப்படம் விரைவில் தமிழிலும் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் காதல் முறிவுக்கு பின்னர் மீண்டும் சினிமாவில் பிஸி நடிகையாகிவிட்ட நயன்தாரா, தெலுங்கில் 3 படமும், தமிழில் 1 படமும் கைவசம் வைத்திருக்கிறார்.

இதுதவிர நிறைய படங்களில் நடக்க பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. இதனிடையே சில பல ஆண்டுகளுக்கு முன்னர், பஞ்சபாண்டவர்கள் கதையை மையப்படுத்தி ஒரு படத்தை எடுக்க இருந்தார் பாலகிருஷ்ணா.

அதில் திரவுபதி கேரக்டரில் நடிக்க மறைந்த நடிகை சவுந்தர்யா ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் எதிர்பாரா விதமாக அவர் விமான விபத்தில் உயிரிழக்க, அந்தப்படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில் ராமராஜ்யம் படத்தில் நயன்தாராவின் நடிப்பு அற்புதமாக அமைந்ததை தொடர்ந்து, திரவுபதி கேரக்டரில் அவரையே நடிக்க வைக்க பாலகிருஷ்ணா முயற்சி செய்து வருகிறார்.

இதுதொடர்பாக நயன்தாராவிடம் பேசி வருவதாக தெரிகிறது. நிச்சயமாக அவரும் சம்மதிப்பார் என்று கூறப்படுகிறது.

அஜித்துடன் குத்தாட்டம் போட்ட பிரேசில் நாட்டு அழகி

அஜித் நடிப்பில் உருவாகி வரும் பில்லா-2 படத்தில் பிரேசிலை சேர்ந்த கேபிரியல் பெர்ட்டான் என்ற அழகி அஜித்துடன் சேர்ந்து ஆட்டம் போட்டு இருக்கிறார். அஜித்தின் பில்லா படத்தின் ‌மாபெரும் வெற்றியை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக பில்லா-2 உருவாகி வருகிறது.

சக்ரி டோல்ட்டி இயக்கி வரும் இப்படத்தில் அஜித் ஜோடியாக பார்வதி ஓமணக்குட்டன் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார். தூத்துக்குடியில் டேவிட்டாக இருந்த அஜித் எப்படி பில்லாவாக மாறினான் என்பதே படத்தின் கதை.

படத்தின் சூட்டிங் கிட்டத்தட்ட முடிந்து விட்டது. இந்நிலையில் படத்தில் ஒரு பாடல் காட்சியில் பிரேசில் நாட்டை சேர்ந்த கேபிரியல் பெர்ட்டான் என்ற அழகி அஜித்துடன் நடனமாடி இருக்கிறார்.

இதுகுறித்து கேபிரியல் பெர்ட்டான் கூறுகையில், பில்லா படத்திற்கு முன்பே சக்ரி டோல்ட்டியை நான் சந்தித்து இருக்கிறேன். அப்போது, அவரிடம் இந்திய படங்களில் நடிக்க ஆர்வம் இருப்பதாக கூறினேன்.

அதன்படி பில்லா-2 படத்தில் ஒரு பாட்டில் ஆட வாய்ப்பு கொடுத்தார். எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. அதுவும் அஜித் கூட என்றதும் கூடுதல் சந்தோஷம். முதல் படத்திலேயே அஜித்துடன் நடனமா...? என்று எனது நண்பர்களும் கூட ரொம்ப ஆச்சரியப்பட்டார்கள்.

ஆரம்பத்தில் அவ்வளவு பெரிய ஸ்டார் கூட எப்படி ஆடுவது என்று சற்று தயங்கினேன். ஆனால் அஜித்தே ரொம்ப என்கரேஜ் செய்து என்னை ஆட வைத்தார். அஜித் எப்பவும் தன் வேலையில் முழு ஈடுபாட்டோடு நடிப்பார்.

அதேசமயம் புதுமுகங்களையும் வரவேற்கும் நற்குணம் கொண்டவர் என்றார். மேலும் பில்லா-2 படத்தை தொடர்ந்து தெலுங்கில் ரவி தேஜா மற்றும் பவன் கல்யாண் உடன் ஒரு படத்திலும் கமிட் ஆகி இருக்கிறேன். தொடர்ந்து தமிழ் படத்தில் நடிக்க ஆர்வமாய் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

சேர்ந்து நடிக்க நோ அப்ஜெக்ஷ்ன்! சிம்பு-நயன்தாரா அறிவிப்பு

எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை, அதனால் சிம்புவுடன் நடிக்க எனக்கு எந்த தயக்கமும் இல்லை என்று நயன்தாரா கூறியுள்ளார். இதே கருத்தை சிம்புவும் தெரிவித்து இருக்கிறார். வல்லவன் என்ற படத்தில் சிம்புவும்-நயன்தாராவும் இணைந்து நடித்தார்கள்.

அப்போது அவர்களுக்குள் தொடங்கிய நட்பு பின்னர் காதலானது. இடையில் ஏற்பட்ட சிலபல பிரச்னைகளால் இருவரும் பிரிந்தனர்.

சிம்புவை பிரிந்த நயன்தாரா, பிறகு பிரபுதேவாவின் காதல் வலையில் விழுந்து, கல்யாணம் வரை சென்று பின்னர், அந்த காதலும் சமீபத்தில் முறிந்தது. இருவரும் அவரவர் படங்களில் பிஸியாகிவிட்டனர்.

இந்நிலையில் சிம்புவும், நயன்தாராவும் மீண்டும் இணைந்து வாலு என்ற படத்தில் நடிக்க போவதாகவும், சிம்புவுடன் நடிக்க நயன்தாரா 3 கண்டிஷன்கள் போட்டதாகவும் சில தினங்களுக்கு முன்னர் செய்திகள் வந்தது.

ஆனால் இதனை நயன்தாரா, சிம்பு இருவருமே மறுத்துள்ளனர். இதுகுறித்து நயன்தாரா கூறுகையில், வாலு படத்தின் இயக்குநர் விஜய், என்னிடம் கால்ஷீட் கேட்டது உண்மை தான். ஆனால் நான், இப்போது 3 தெலுங்கு படங்களுக்கு கால்ஷீ்ட ‌கொடுத்துள்ளேன்.

இதனால் இப்படத்திற்கு என்னால் தேதி கொடுக்க முடியவில்லை. இதுதான் நடந்தது. மற்றபடி நான் ரூ.3 கோடி கேட்டது, கண்டிஷன் எல்லாம் போட்டது போன்ற செய்தி எல்லாம் உண்மையில்லை. எனக்கும், சிம்புவுக்கும் எந்த பிரச்னையும் இல்லை.

அவருடன் நடிக்க எந்த தயக்கமும் இல்லை. என்னிடம் கால்ஷீட் இருந்தால் நிச்சயம் அவருடன் சேர்ந்து நடிப்பேன். இல்லையென்றால் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

இதேபோல் சிம்புவும், எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. நானும், நயன்தாராவும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று தயாரிப்பாளரோ, இயக்குநரோ ஆசைப்பட்டால், எங்கள் இருவர் இடத்திலும் கால்ஷீட் இருந்தால் நிச்சயமாக நடிப்போம் என்று கூறியுள்ளார்.

தனுஷ் ஜோடியாக பூ பார்வதி

பார்வதியை நினைவிருக்கிறதா...? சில ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளிவந்த பூ படத்தின் நாயகியே தான். பூ படத்தில் அவரது நடிப்பை பாராட்டாதவர்களே இருக்கவே முடியாது.

இருந்தும் அந்த படத்திற்கு பிறகு, தமிழ் சினிமாவில் அவரை ஆளையே காணோம். கன்னடத்தில் சில படங்களில் நடித்து வந்த பார்வதி, இப்போது மீண்டும் வந்திருக்கிறார்.

அதுவும் தனுஷூக்கு ஹீரோயினாக நடிக்க போகிறார். ஆனால் இந்த இருவரும் ஜோடி சேரும் படம் தமிழில் அல்ல, இந்தியில்.

ஏ.ஆர்.ரஹ்மானின் வந்தே மாதரம் பாடலை படமாக்கிய பரத்பாலா, தனுஷை வைத்து இந்தியில் ஒரு படம் இயக்க போகிறார்.

படத்தில் தனக்கு ஜோடியாக இவர் தான் வேண்டும், அவர் தான் வேண்டும் என்று யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லையாம் தனுஷ். ‌

அந்த பொறுப்பை டைரக்டர் கையிலேயே விட்டுவிட்டாராம். அதன்படி டைரக்டர் பரத்பாலா, பார்வதியை தேர்வு செய்து இருக்கிறார்.

தனுஷ் உடன் ஜோடி சேர இருப்பது தனக்கு ரொம்ப மகிழ்ச்சி அளிப்பதாகவும், இதன் மூலம் தனக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்று பார்வதி கூறியிருக்கிறார்.

அனுஷ்கா பின்வாங்க காரணம் என்ன?

மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையைத் தழுவி இந்தியில் வித்யாபாலனை ஹீரோயினாக வைத்து எடுக்கப்பட்ட தி டர்ட்டி பிக்சர்ஸ் திரைப்படத்தை தமிழில் எடுக்க படக்குழுவினர் விறுவிறுப்பாக ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

முதல் பணியாக அவர்கள் கையில் எடுத்துக் கொண்டதே ஹீரோயினை முடிவு செய்வது தானாம்.

ஒரு வழியாக, அனுஷ்கா தான் ஹீரோயினாக நடிக்க சரியானவர் என முடிவு செய்து அவருக்கு தூண்டில் போட, அனுஷ்காவோ கழுவுற மீனில் நழுவுறு மீனாக முடியாது என்று சொல்லிவிட்டார் என்கிறது விரவமறிந்த வட்டாரம்.

தமிழில் ஏற்கனவே, இரண்டாம் உல்கம், அலெக்ஸ் பாண்டியன், தாண்டவம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் அனுஷ்கா. தெலுங்கிலும் அம்மணி பிஸியாக இருக்கிறார்.

இதனால் தான் டர்ட்டி பிக்சர்ஸ் தமிழ் படத்தில் நடிக்க அனுஷ்கா மறுத்து விட்டதாக அவருக்கு நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது.

ஆனால், வித்யாபாலன் அளவுக்கு பெர்மார்மன்ஸ் கொடுக்க முடியுமா என்ற தயக்கமே அனுஷ்கா பின் வாங்க காரணம் என்கிறது மற்றொரு தரப்பு.

துப்பாக்கியில் ஏ.ஆர்.முருகதாஸின் நடிப்பு அவதாரம்

இதுவரை திரைக்கு பின்னால் மட்டும் இருந்து கொண்டு அசத்தி வந்த டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ், தான் இயக்கி வரும் துப்பாக்கி படத்தில் ஒரு சிறிய ரோலில் வந்து போய் உள்ளாராம்.

ஏழாம் அறிவு படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் படம் துப்பாக்கி. இப்படத்தில் நாயகனாக விஜய்யும், நாயகியாக காஜல் அகர்வாலும் நடிக்கின்றனர். இவர்களுடன் ஜெய்ராம், சத்யன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். அக்ஷ்ன் மற்றும் த்ரில்லங் கலந்து உருவாகி வரும் இப்படத்தின் கதை பெரும்பாலும் மும்பையை சுற்றி நகர்வதால் படத்தின் பெரும்பகுதியை மும்பையிலேயே நடத்தி வருகிறார் முருகதாஸ். இப்படத்தின் சூட்டிங் பாதிக்கு மேல் நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில் படத்தில் விஜய் கேட்டு கொண்டதற்கு இணங்க, ஒரு சிறிய ரோலில் ஏ.ஆர்.முருகதாசும் நடித்து உள்ளாராம். இத்தகவலை இசையமைப்பாளர் ஹாரிஸ் தெரிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, துப்பாக்கியில் விஜய் உள்ளிட்ட பலபேர் நடித்திருந்தாலும் ஏ.ஆர்.முருகதாஸ் நடித்திருப்பது தான் ரொம்ப ஹைலைட்டான விஷயம்.

விஜய்யின் வற்புறுத்தலால் முருகதாஸ் நடித்தார் என்று கூறியுள்ளார்.

3-ல் ஸ்ருதி நடிப்பை பார்த்து கமல் பெருமிதம்

3 படத்தில் ஸ்ருதியின் நடிப்பை பார்த்து வெகுவாக பாராட்டியிருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில், தனுஷ்-ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகி இருக்கும் கொலவெறி புகழ் 3 படம், கடந்த 30ம் தேதி முதல் ரிலீஸாகி ஓடிக் கொண்டு இருக்கிறது.

ரசிகர்கள் மத்தியில் ஒருபக்கம் நல்ல விமர்சனமும், மற்றொரு பக்கம் எதிர்பார்த்த அளவுக்கு படம் இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இப்படத்தினை நடிகர் கமல்ஹாசனுக்கு பிரத்யேகமாக திரையிட்டு காட்டியுள்ளார் தனுஷ். படத்தை பார்த்துவிட்டு கமல்ஹாசன், தனது மகளை புகழ்ந்து தள்ளிவிட்டார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, விஸ்வரூபம் படத்திற்காக நான் வெளிநாடு புறப்பட்டு செல்வதற்கு முன் இந்தபடத்தை தனுஷ் என்னிடம் போட்டு காண்பித்தார்.

படத்தில் ஸ்ருதியின் நடிப்பு அற்புதமாக இருந்தது. ‌எல்லோரும் ஸ்ருதியை அவரது தாய் சாயலில் இருப்பதாக சொல்வார்கள். ஆனால் இந்தபடத்தில் ஸ்ருதி உருவில், என்னை நானே பார்த்தேன். இதை ஒரு அப்பாவாக சொல்லவில்லை.

ஒரு நடிகையாக இப்போது அவர் வந்திருக்கும் இடம் மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறியுள்ளார்.

மேலும் எந்த ஒரு பெண் இயக்குநரும் செய்திடாத புதிய முயற்சியை ஐஸ்வர்யா மேற்கொண்டுள்ளார். அவருக்கும் என் பாராட்டுகள் என்று கூறியுள்ளார்.

சிம்புவின் அடுத்தபடம் வாலு

சிம்பு அடுத்து நடிக்க இருக்கும் புதிய படத்திற்கு வாலு என்று பெயர் வைத்துள்ளனர். நடிகர் சிம்பு அலைஸ் எஸ்.டி.ஆர்., இப்போது புதுமுகம் நெல்சன் இயக்கும், "வேட்டை மன்னன்" படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் சிம்புவுடன் தீக்ஷா சேத் மற்றும் ஹன்சிகா மோத்வானி ஆகிய இரண்டு ஹீரோயின்களும், முக்கிய கதாபாத்திரத்தில் ஜெய்யும் நடித்து வருகின்றனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதன்முறையாக டிஸ்னி லேண்ட் மற்றும் ஹாங்காங்கில் சிம்புவின் படம் படமாக்கப்பட இருக்கிறது.

இந்நிலையில் வேட்டை மன்னன் படத்திற்கு அடுத்து இன்னொரு புதிய படத்தில் சிம்பு கமிட் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்திற்கு வாலு என்று பெயர் வைத்திருப்பதாகவும், புதுமுகம் விஜய் இப்படத்தை இயக்க இருப்பதாகவும், நிக் ஆர்ட்ஸ், எஸ்.எஸ்.சக்கரவர்த்தி தயாரிக்க போவதாகவும் கூறப்படுகிறது.

வேட்டை மன்னன் படத்தை முடித்த பிறகு வாலு படத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது. விரைவில் இப்படம் பற்றிய முழு அறிவிப்பும் வெளியாக இருக்கிறது.

இதனிடையே சிம்பு நடித்து வரும் வேட்டை மன்னன் படத்தின் பட்‌ஜெட் ரூ.30-40 கோடி என்று கூறப்படுகிறது. இதுவரை சிம்பு நடித்த படங்களிலேயே வேட்டை மன்னன் படம் தான் ரொம்ப காஸ்ட்லி என்பது குறிப்பிடத்தக்கது.
Related Posts Plugin for WordPress, Blogger...