எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை, அதனால் சிம்புவுடன் நடிக்க எனக்கு எந்த தயக்கமும் இல்லை என்று நயன்தாரா கூறியுள்ளார். இதே கருத்தை சிம்புவும் தெரிவித்து இருக்கிறார். வல்லவன் என்ற படத்தில் சிம்புவும்-நயன்தாராவும் இணைந்து நடித்தார்கள்.
அப்போது அவர்களுக்குள் தொடங்கிய நட்பு பின்னர் காதலானது. இடையில் ஏற்பட்ட சிலபல பிரச்னைகளால் இருவரும் பிரிந்தனர்.
சிம்புவை பிரிந்த நயன்தாரா, பிறகு பிரபுதேவாவின் காதல் வலையில் விழுந்து, கல்யாணம் வரை சென்று பின்னர், அந்த காதலும் சமீபத்தில் முறிந்தது. இருவரும் அவரவர் படங்களில் பிஸியாகிவிட்டனர்.
இந்நிலையில் சிம்புவும், நயன்தாராவும் மீண்டும் இணைந்து வாலு என்ற படத்தில் நடிக்க போவதாகவும், சிம்புவுடன் நடிக்க நயன்தாரா 3 கண்டிஷன்கள் போட்டதாகவும் சில தினங்களுக்கு முன்னர் செய்திகள் வந்தது.
ஆனால் இதனை நயன்தாரா, சிம்பு இருவருமே மறுத்துள்ளனர். இதுகுறித்து நயன்தாரா கூறுகையில், வாலு படத்தின் இயக்குநர் விஜய், என்னிடம் கால்ஷீட் கேட்டது உண்மை தான். ஆனால் நான், இப்போது 3 தெலுங்கு படங்களுக்கு கால்ஷீ்ட கொடுத்துள்ளேன்.
இதனால் இப்படத்திற்கு என்னால் தேதி கொடுக்க முடியவில்லை. இதுதான் நடந்தது. மற்றபடி நான் ரூ.3 கோடி கேட்டது, கண்டிஷன் எல்லாம் போட்டது போன்ற செய்தி எல்லாம் உண்மையில்லை. எனக்கும், சிம்புவுக்கும் எந்த பிரச்னையும் இல்லை.
அவருடன் நடிக்க எந்த தயக்கமும் இல்லை. என்னிடம் கால்ஷீட் இருந்தால் நிச்சயம் அவருடன் சேர்ந்து நடிப்பேன். இல்லையென்றால் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
இதேபோல் சிம்புவும், எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. நானும், நயன்தாராவும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று தயாரிப்பாளரோ, இயக்குநரோ ஆசைப்பட்டால், எங்கள் இருவர் இடத்திலும் கால்ஷீட் இருந்தால் நிச்சயமாக நடிப்போம் என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment