சீதையாய் நடித்து அசத்திய நடிகை நயன்தாரா, அடுத்து பஞ்சபாண்டவர்களின் மனைவியாய், திரவுபதி எனும் பாஞ்சாலி கேரக்டரில் நடிக்க இருக்கிறாராம். பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு முன்னர் தெலுங்கில் கடைசியாய் நடித்த படம் "ஸ்ரீ ராம ராஜ்யம்".
ராமாயணத்தை மையமாக வைத்து உருவான இக்கதையில், ராமராக பாலகிருஷ்ணாவும், சீதையாக நயன்தாராவும் நடித்தனர்.
சமீபத்தில் வெளியான இப்படம் நயன்தாராவுக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அதுமட்டும் அல்லாது அந்த கேரக்டருக்காக அவருக்கு விருதும் கிடைத்தது. மேலும் இப்படம் விரைவில் தமிழிலும் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் காதல் முறிவுக்கு பின்னர் மீண்டும் சினிமாவில் பிஸி நடிகையாகிவிட்ட நயன்தாரா, தெலுங்கில் 3 படமும், தமிழில் 1 படமும் கைவசம் வைத்திருக்கிறார்.
இதுதவிர நிறைய படங்களில் நடக்க பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. இதனிடையே சில பல ஆண்டுகளுக்கு முன்னர், பஞ்சபாண்டவர்கள் கதையை மையப்படுத்தி ஒரு படத்தை எடுக்க இருந்தார் பாலகிருஷ்ணா.
அதில் திரவுபதி கேரக்டரில் நடிக்க மறைந்த நடிகை சவுந்தர்யா ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் எதிர்பாரா விதமாக அவர் விமான விபத்தில் உயிரிழக்க, அந்தப்படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில் ராமராஜ்யம் படத்தில் நயன்தாராவின் நடிப்பு அற்புதமாக அமைந்ததை தொடர்ந்து, திரவுபதி கேரக்டரில் அவரையே நடிக்க வைக்க பாலகிருஷ்ணா முயற்சி செய்து வருகிறார்.
இதுதொடர்பாக நயன்தாராவிடம் பேசி வருவதாக தெரிகிறது. நிச்சயமாக அவரும் சம்மதிப்பார் என்று கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment