ஒரு படத்தில் நடித்து, அந்தபடம் சூப்பர் ஹிட்டாகிவிட்டாலே அடுத்த படம் நடிப்பதற்குள் கைநிறைய விளம்பர படங்களை குவித்து விடும் இந்தக்கால நடிகர்-நடிகையருக்கு மத்தியில், சினிமாவுக்கு வந்து 50 ஆண்டு காலமாகியும் இதுவரை விளம்பர படங்களில் நடிக்காமல் இருந்து வந்த கமல்ஹாசன், இப்போது முதன்முறையாக விளம்பர படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்தியில் அமிதாப், ஷாரூக்கான், அபிஷேக், ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர் போன்ற பாலிவுட் ஸ்டார்களை வைத்து விளம்பர படங்களை எடுத்த பிரபல மும்பை நிறுவனம் ஒன்று கமல்ஹாசனை வைத்து விளம்பரம் எடுக்க ஒப்பந்தம் செய்திருக்கிறது.
இதுகுறித்து கமல்ஹாசன் கூறியுள்ளதாவது,
இந்தியாவின் பல ஸ்டார்களை வைத்து விளம்பரம் எடுத்த சுனில் தோஷியின் அலைன்ஸ் விளம்பர நிறுவனத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளேன்.
சினிமா வாழ்க்கையில் முதல் தடவையாக இந்த முயற்சியில் இறங்குகிறேன்.
இதன்மூலம் என்னால் முடிந்த அளவுக்கு சமூக சேவையில் ஈடுபட முயற்சிப்பேன் என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment