துப்பாக்கியில் ஏ.ஆர்.முருகதாஸின் நடிப்பு அவதாரம்

இதுவரை திரைக்கு பின்னால் மட்டும் இருந்து கொண்டு அசத்தி வந்த டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ், தான் இயக்கி வரும் துப்பாக்கி படத்தில் ஒரு சிறிய ரோலில் வந்து போய் உள்ளாராம்.

ஏழாம் அறிவு படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் படம் துப்பாக்கி. இப்படத்தில் நாயகனாக விஜய்யும், நாயகியாக காஜல் அகர்வாலும் நடிக்கின்றனர். இவர்களுடன் ஜெய்ராம், சத்யன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். அக்ஷ்ன் மற்றும் த்ரில்லங் கலந்து உருவாகி வரும் இப்படத்தின் கதை பெரும்பாலும் மும்பையை சுற்றி நகர்வதால் படத்தின் பெரும்பகுதியை மும்பையிலேயே நடத்தி வருகிறார் முருகதாஸ். இப்படத்தின் சூட்டிங் பாதிக்கு மேல் நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில் படத்தில் விஜய் கேட்டு கொண்டதற்கு இணங்க, ஒரு சிறிய ரோலில் ஏ.ஆர்.முருகதாசும் நடித்து உள்ளாராம். இத்தகவலை இசையமைப்பாளர் ஹாரிஸ் தெரிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, துப்பாக்கியில் விஜய் உள்ளிட்ட பலபேர் நடித்திருந்தாலும் ஏ.ஆர்.முருகதாஸ் நடித்திருப்பது தான் ரொம்ப ஹைலைட்டான விஷயம்.

விஜய்யின் வற்புறுத்தலால் முருகதாஸ் நடித்தார் என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...