பில்லா-2 வில் யுவனின் அசத்தல் நடனம்

பில்லா-2 படத்தை பற்றி தினம் ஒரு தகவல் வந்து கொண்டிருக்கிறது. இன்றைய தகவல் என்னவென்றால் படத்தில் இசையமைத்து இருப்பதுடன் அசத்தலாக ஒரு பாட்டுக்கு நடனமும் ஆடியிருக்கிறாராம் யுவன் சங்கர் ராஜா.

மங்காத்தா படத்தை தொடர்ந்து அஜித் நடித்து இருக்கும் படம் பில்லா-2. பில்லா படம் ‌மாபெரும் ஹிட்டானதை தொடர்ந்து அதன் 2ம் பாகமாக இப்படம் உருவாகி வருகிறது.

டேவிட், எப்படி பில்லாவாக மாறினான் என்பதே பில்லா-2 படத்தின் கதைக்களம். இப்படத்தின் சூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கான பணிகள் நடந்து வருகிறது.

இதனிடையே பில்லா-2 படத்தின் ஸ்டில்கள் மற்றும் டிரைலர்கள் இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது. மேலும் வர்த்தக ரீதியாகவும் இப்படத்திற்கு நல்ல விலை பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பில்லா-வை போலவே பில்லா-2விலும் மிரட்டலாக இசை அமைத்திருக்கும் யுவன் சங்கர் ராஜா, படத்தில் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடவும் செய்திருக்கிறார்.

இதுகுறித்து படத்தின் டைரக்டர் சக்ரி கூறுகையில், யுவனை இப்படத்தில் ஒரு பாட்டுக்கு ஆட வைக்க திட்டமிட்டேன். பலமுறை அவரிடம் கேட்டபிறகு நடனம் ஆட சம்மதித்தார்.

அந்த பாடலும் நன்றாக வந்திருக்கிறது. ரசிகர்களை இந்தப்பாடல் நிச்சயம் கவரும் என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...