பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் அசிஸ்டென்டாக இருந்த பிரபுராஜ சோழன் இயக்கத்தில், அஜ்மல், அபர்ணா பாஜ்பாய் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் கருப்பம்பட்டி.
இப்படத்தில், நாட்டி ராஜா ராஜா.. என்ற ஒரு குத்துப் பாடல் இடம் பெறுகிறது. இப்பாடலுக்காக பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் பப்பிலஹரிக்கு பெரிய தொகையைக் கொடுத்து, மும்பை ஸ்டுடியோவில் வைத்து பதிவு செய்துள்ளனர்.
பாட்டும் நன்றாக வந்திருப்பதாக டைரக்டர் பிரபுராஜா சோழன் கூறியிருக்கிறார். முதன்முறையாக தமிழ் படம் ஒன்றுக்கு பப்பி லஹரி பாடியிருக்கிறார்.
இது போதாது என்று பாடலில் ஆட்டம் போட, அமெரிக்க பாப் பாடகி கேட்டி பெர்ரியை அனுகியிருக்கிறாராம் இயக்குநர் பிரபு ராஜ சோழன்.
சென்னையில் நடந்த ஐ.பி.எல்., சீசன் 5 துவக்க விழாவில் ஆட்டம் போட்ட கேட்டி பெர்ரி மீது கோலிவுட் கண்கள் குறி வைத்திருக்கின்றனாம்!
முதலில் களம் இறங்கியிருப்பவர் பிரபு ராஜ சோழன். எப்படியாவது கேட்டியை குத்தாட்டம் போட வைக்க கடும் பிரயத்தனம் செய்து வருகிறாராம் மனிதர்.பிரமாண்ட இயக்குநரிடம் பணியாற்றியதால் வந்த தாக்கம் தானோ?!
0 comments:
Post a Comment