பார்வதியை நினைவிருக்கிறதா...? சில ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளிவந்த பூ படத்தின் நாயகியே தான். பூ படத்தில் அவரது நடிப்பை பாராட்டாதவர்களே இருக்கவே முடியாது.
இருந்தும் அந்த படத்திற்கு பிறகு, தமிழ் சினிமாவில் அவரை ஆளையே காணோம். கன்னடத்தில் சில படங்களில் நடித்து வந்த பார்வதி, இப்போது மீண்டும் வந்திருக்கிறார்.
அதுவும் தனுஷூக்கு ஹீரோயினாக நடிக்க போகிறார். ஆனால் இந்த இருவரும் ஜோடி சேரும் படம் தமிழில் அல்ல, இந்தியில்.
ஏ.ஆர்.ரஹ்மானின் வந்தே மாதரம் பாடலை படமாக்கிய பரத்பாலா, தனுஷை வைத்து இந்தியில் ஒரு படம் இயக்க போகிறார்.
படத்தில் தனக்கு ஜோடியாக இவர் தான் வேண்டும், அவர் தான் வேண்டும் என்று யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லையாம் தனுஷ்.
அந்த பொறுப்பை டைரக்டர் கையிலேயே விட்டுவிட்டாராம். அதன்படி டைரக்டர் பரத்பாலா, பார்வதியை தேர்வு செய்து இருக்கிறார்.
தனுஷ் உடன் ஜோடி சேர இருப்பது தனக்கு ரொம்ப மகிழ்ச்சி அளிப்பதாகவும், இதன் மூலம் தனக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்று பார்வதி கூறியிருக்கிறார்.
0 comments:
Post a Comment