பிரச்சினையில் இருந்து மீண்டு விட்டேன்: நயன்தாரா

நயன்தாரா-பிரபுதேவா காதல் முறிந்து பிரிந்துள்ளனர். திருமணத்துக்கு பிரபுதேவா சம்மதிக்காததால் பிரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மதம் மாறியும் சினிமாவுக்கு முழுக்கு போட்டும் திருமணத்துக்காக காத்திருந்த தன்னை பிரபு தேவா ஏமாற்றி விட்டதாக நயன்தாரா கலங்குவதாக கூறப்படுகிறது.

தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். தெலுங்கு, தமிழ் படங்களில் நடிக்க அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர். சினிமாவில் இரண்டாவது ரவுண்டு துவங்கியுள்ள நயன்தாரா ஐதராபாத்தில் அளித்த பேட்டி வருமாறு:-

சமீபத்தில் நிறைய பிரச்சினைகளை சந்தித்தேன். கஷ்டங்களை அனுபவித்தேன். அவை என்னை பக்குவப்படுத்தி என்ன வந்தாலும் எதிர் கொள்ளலாம் என்ற மனதிடத்தையும் அளித்துள்ளது. இனி எதற்கும் கலங்க மாட்டேன். பிரச்சினைகள் எப்படி வந்தாலும் சந்திப்பேன்.

பெரியவர்கள் என்ன நடந்தாலும் நம் நல்லதுக்குத்தான் என்று சொல்வதை கேள்விப்பட்டு இருக்கோம். அது என் வாழ்க்கையில் நிஜமாகியுள்ளது. நடந்த சம்பவங்களை நல்லதுக்குத்தான் என்று எடுத்துக் கொண்டேன். மீண்டும் சினிமாவில் நடிக்க வந்து விட்டேன். வாழ்க்கை இப்போ நல்லா போயிட்டு இருக்கு தமிழ், தெலுங்கு படங்களில் வாய்ப்புகள் வருகின்றன.

சிறு வயதில் கஷ்டம் கண்ணீர் தெரியாமல் ரொம்ப செல்லமா வளர்ந்தேன். அப்புறம் பிரச்சினைகளில் மாட்டி அவதிப்பட்டேன். அது ரொம்ப தப்பு என இப்ப புரியது. துன்பங்களை மறக்க பழகி விட்டேன்.

பிரச்சினைகளை எதிர்த்து போராடும் திறமை இல்லாவிட்டாலும் அவற்றில் இருந்து தப்பிக்க வழி தெரிந்து இருக்க வேண்டும்.

திரிஷாவுடன் எனக்கு மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக கிசுகிசுக்கள் வருகின்றன. பத்திரிகைகளில் வெளியாகும் இது போன்ற செய்திகளுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...