சிம்பு அடுத்து நடிக்க இருக்கும் புதிய படத்திற்கு வாலு என்று பெயர் வைத்துள்ளனர். நடிகர் சிம்பு அலைஸ் எஸ்.டி.ஆர்., இப்போது புதுமுகம் நெல்சன் இயக்கும், "வேட்டை மன்னன்" படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் சிம்புவுடன் தீக்ஷா சேத் மற்றும் ஹன்சிகா மோத்வானி ஆகிய இரண்டு ஹீரோயின்களும், முக்கிய கதாபாத்திரத்தில் ஜெய்யும் நடித்து வருகின்றனர்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதன்முறையாக டிஸ்னி லேண்ட் மற்றும் ஹாங்காங்கில் சிம்புவின் படம் படமாக்கப்பட இருக்கிறது.
இந்நிலையில் வேட்டை மன்னன் படத்திற்கு அடுத்து இன்னொரு புதிய படத்தில் சிம்பு கமிட் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்திற்கு வாலு என்று பெயர் வைத்திருப்பதாகவும், புதுமுகம் விஜய் இப்படத்தை இயக்க இருப்பதாகவும், நிக் ஆர்ட்ஸ், எஸ்.எஸ்.சக்கரவர்த்தி தயாரிக்க போவதாகவும் கூறப்படுகிறது.
வேட்டை மன்னன் படத்தை முடித்த பிறகு வாலு படத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது. விரைவில் இப்படம் பற்றிய முழு அறிவிப்பும் வெளியாக இருக்கிறது.
இதனிடையே சிம்பு நடித்து வரும் வேட்டை மன்னன் படத்தின் பட்ஜெட் ரூ.30-40 கோடி என்று கூறப்படுகிறது. இதுவரை சிம்பு நடித்த படங்களிலேயே வேட்டை மன்னன் படம் தான் ரொம்ப காஸ்ட்லி என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment