தன்னுடன் இணைந்து மேடை நிகழ்ச்சியொன்றில் கொலைவெறி பாடலுக்கு நடனம் ஆடுவதாகக் கூறிய தனுஷ், வராததால் ஏமாற்றமடைந்ததாக பிரபல கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
தான் பட்ட கஷ்டமெல்லாம் வீணாய்ப் போய்விட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். பாலிவுட்டி பரபரப்பு கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த்.
இவர் மும்பை நிகழ்ச்சியொன்றில் தனுஷுடன் மேடையில் தோன்றி ‘ஒய் திஸ் கொல வெறி டி என்ற 3 பட பாட்டிற்கு நடனம் ஆட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டதாம். இந்த விழாவில் முதலில் நடனம் ஆட ஒப்புக்கொண்ட தனுஷ் விழாவுக்கும் செல்லவில்லை. இதனால் ராக்கி சாவந்த் கோபம் அடைந்தார்.
தனுஷுடன் இணைந்து ஆடவேண்டும் என்று கூறியதால்தான் நான் ஒப்புக்கொண்டேன். இதற்காக பலமுறை ஒத்திகையில் ஈடுபட்டேன். இவ்வளவு கஷ்டப்பட்டது வீணாகிவிட்டது.
வருவதாக உறுதி கூறியவர், வராமல் ஏமாற்றி விட்டார். இது தொழில்முறை கலைஞருக்குரியதல்ல, என்றார் கோபமாக.
இதுபற்றி தனுஷ், 3 படம் ரிலீசுக்காக நான் சென்னையில் இருக்க வேண்டி இருந்தது. எனவேதான் ராக்கி சாவந்த் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை, என்றார் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment