கமல்ஹாசன் நடித்து வரும் விஸ்வரூபம் படத்தின் டிரைலர் மே 1ம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் கமல்ஹாசன் பிரம்மாண்ட பொருட்ச்செலவில் இயக்கி, நடித்து, தயாரித்து வரும் படம் விஸ்வரூபம்.
இப்படத்தில் கமல் ஜோடியாக பூஜா குமார் நடிக்கிறார். இவர் தவிர ஆன்ட்ரியாவும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். பொதுவாக பெரிய நடிகர்களின் படம் என்றால் அப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும்.
அதேசமயம் அப்படம் குறித்து சிறிய தகவல்களாவது வெளியாகும். ஆனால் விஸ்வரூபம் படத்தை பொறுத்தமட்டில் இப்படம் குறித்த சிறு விஷயம் கூட இதுவரை தெரியவில்லை.
கமல் இப்படத்தில் என்ன ரோலில் நடிக்கிறார், படத்தின் கதை என்ன? என்று இதுவரை யாருக்கும் தெரியாது. அந்தளவுக்கு இப்படம் குறித்து ரகசியம் வெளியில் தெரியாத அளவுக்கு படம் பிடித்து வருகிறார் கமல்ஹாசன். இதனாலேயே இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உண்டாகி இருக்கிறது.
இந்நிலையில் விஸ்வரூபம் படத்தின் டிரைலர் மே-1ம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. மே 1 உழைப்பாளர் தினம் என்பதால், அன்றைய தினத்தில் இப்படத்தின் டிரைலரை வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று கமல் கருதுகிறார்.
30 விநாடிகள் ஓடும் வகையில் இந்த டிரைலரை தயார் செய்துள்ளனர். படத்தின் முக்கிய சீன்கள் இந்த டிரைலரில் சேர்க்கப்பட்டுள்ளதாம்.
விஸ்வரூபம் படத்தின் பெரும்பாலான சூட்டிங் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. ஜூன் மாத இறுதியில் இப்படம் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment