பாலிவுட் சினிமாவை போல கோலிவுட்டிலும் இரண்டு ஹீரோக்கள் சேர்ந்து நடிக்கும் டிரண்ட் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் வெளியான அவன் இவன், விரைவில் வெளிவர இருக்கும் முகமூடி, கலகலப்பு(மசாலா கபே) போன்ற படங்களை சொல்லலாம்.
பாலிவுட்டிற்கு முன்னரே தமிழ் சினிமாவில் இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் நடைமுறை இருந்து வந்தது. அதன்பிறகு ஹீரோக்களுக்கு தனியாக முக்கியத்துவம் கருதி இந்தநிலை நீடிக்கவில்லை.
ஆனால் பாலிவுட்டில் மட்டும் எப்போதும் போல ஷாரூக், சல்மான், அமீர் போன்றவர்கள் இந்த பாணியை பின்பற்றி வருவதால் தமிழ் சினிமாவில் மீண்டும் இரண்டு ஹீரோக்கள் சப்ஜெக்ட் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் டைரக்டர் பிஜய் நம்பியார், அடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் ஆக்ஷ்ன் மற்றும் த்ரில்லர் கலந்த ஒரு படத்தை இயக்க உள்ளார்.
தமிழ் மொழியில் உருவாகும் படத்திற்கு டேவிட் என்று பெயர் வைத்துள்ளார். இதில் ஹீரோக்களாக விக்ரம் மற்றும் ஜீவா ஆகியோர் நடிக்க உள்ளனர்.
இதுதவிர இந்தி மற்றும் தெலுங்கில் முக்கிய இரு ஹீரோக்கள் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
தற்போது ஜீவா மிஸ்கினின் முகமூடி மற்றும் கவுதமின் நீதானே என் பொன் வசந்தம் படத்திலும், விக்ரம் - விஜய்யின் தாண்டவம் படத்திலும் நடித்து வருகிறார்.
இவர்கள் இருவரும் தங்களது படங்களை முடித்த பின்னர் டேவிட் படத்தில் இணைவார்கள் என்று தெரிகிறது.
0 comments:
Post a Comment