3 படத்தில் ஸ்ருதியின் நடிப்பை பார்த்து வெகுவாக பாராட்டியிருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில், தனுஷ்-ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகி இருக்கும் கொலவெறி புகழ் 3 படம், கடந்த 30ம் தேதி முதல் ரிலீஸாகி ஓடிக் கொண்டு இருக்கிறது.
ரசிகர்கள் மத்தியில் ஒருபக்கம் நல்ல விமர்சனமும், மற்றொரு பக்கம் எதிர்பார்த்த அளவுக்கு படம் இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இப்படத்தினை நடிகர் கமல்ஹாசனுக்கு பிரத்யேகமாக திரையிட்டு காட்டியுள்ளார் தனுஷ். படத்தை பார்த்துவிட்டு கமல்ஹாசன், தனது மகளை புகழ்ந்து தள்ளிவிட்டார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, விஸ்வரூபம் படத்திற்காக நான் வெளிநாடு புறப்பட்டு செல்வதற்கு முன் இந்தபடத்தை தனுஷ் என்னிடம் போட்டு காண்பித்தார்.
படத்தில் ஸ்ருதியின் நடிப்பு அற்புதமாக இருந்தது. எல்லோரும் ஸ்ருதியை அவரது தாய் சாயலில் இருப்பதாக சொல்வார்கள். ஆனால் இந்தபடத்தில் ஸ்ருதி உருவில், என்னை நானே பார்த்தேன். இதை ஒரு அப்பாவாக சொல்லவில்லை.
ஒரு நடிகையாக இப்போது அவர் வந்திருக்கும் இடம் மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறியுள்ளார்.
மேலும் எந்த ஒரு பெண் இயக்குநரும் செய்திடாத புதிய முயற்சியை ஐஸ்வர்யா மேற்கொண்டுள்ளார். அவருக்கும் என் பாராட்டுகள் என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment